மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழ்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் கடம்பாடி கே.கே.பூபதி முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில தொண்டரணி இணை செயலாளரும், திருப்போரூர் தொகுதி பொருப்பாளருமான எஸ்.எம்.கே. அண்ணாதுரை கலந்துகொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், 2026 தேர்தலை முன்வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த கழக உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். இதில், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் சுகுமார், கடம்பாடி ஊராட்சி தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேட்டு, முன்னாள் ஊராட்சி தலைவர் கங்காதரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.