சிவகங்கை, மே 31: சிவகங்கையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வைத்திய தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரிய கருப்பன் சிறப்புரையாற்றினர். மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கூடுதலானோர் செல்வது. ஜூன் 3 ஆண்டு கலைஞரின் பிறந்த நாளையொட்டி கிராமங்கள் நகரங்கள் முழுவதும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்வது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ, முன்னாள் எம்எல்ஏ மதியரசன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் மாரியப்பன்கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், மந்தக்காளை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் நன்றி கூறினார்.