திருவண்ணாமலை, ஆக.2: திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் திமுக ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி பொறுப்புகளுக்கு வரும் 10ம்தேதிக்குள் விண்ணப்ப வேண்டும் என்று அமைசசர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் திமுக மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே, மாணவர் அணி பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வந்தவாசியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அந்ததந்த மாவட்ட அலுவலகங்களில் வரும் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். நகர, ஒன்¬றியம், பேரூர் அமைப்பிற்கு தலா ஒரு அமைப்¬பா¬ளர், 5 துணை அமைப்¬பா¬ளர்¬கள் நியமிக்கப்¬பட உள்ளனர்.
துணை அமைப்¬பா¬ளர்¬க¬ளில் ஒருவர் ஆதிதிரா¬விடர் அல்லது பழங்¬குடியின இனத்¬தை சேர்ந்¬த¬வரா¬கவும் மற்¬றும் பெண் துணை அமைப்¬பா¬ளர் ஒருவருமிடம் பெறுவது அவசியம். மேலும், ஒரு துணை அமைப்¬பா¬ளர் கண்¬டிப்¬பாக தற்¬போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவர் ஒருவர், துணை அமைப்பாளராக இருப்பது அவசியம். 30 வயதுக்கு உட்¬பட்¬ட¬வர்¬கள் மட்டும் இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் அணிக்கு நியமிக்-க¬ப்படும் நிர்¬வா¬கிகள் அனை¬வரும் கல்லூரி, டிப்ளமோ படிப்பை முடித்¬த¬வரா-கவோ அல்¬லது தற்¬போது கல்லூரியில் படிப்பவராகவோ இருக்க வேண்டும். அதோடு, தற்போது இப்பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் மீண்டும் பொறுப்புக்கு வர விரும்பினால் அவர்களும் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்¬ணப்¬பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்-களை¬யும் தெளிவாக முழு¬மையாக நிரப்பி, பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்-படம் ஒட்டி விண்¬ணப்பிக்க வேண்¬டும். அதோடு, திமுக உறுப்பி¬னர் அட்டை, வாக்கா¬ளர் அடை¬யாள அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்¬றிதழின் நகல் இணைப்¬பது அவசியம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.