இடைப்பாடி, ஆக.31: இடைப்பாடி ஒன்றிய திமுக, பூலாம்பட்டி பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், சித்தூரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி தலைமை வகித்து பேசுகையில், ‘சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வீரபாண்டி, ஓமலூர், சேலம் மத்திய தெற்கு உள்பட அனைத்து பகுதிகளில், அதிக வாக்குகள் அளித்து அயராத உழைத்து வெற்றி பெற செய்தீர்கள். இந்தியாவில் எந்த மாநிலம் செய்யாத குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு ₹1000 உதவித்தொகை, மகளிருக்கு இலவச பஸ் போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்கள் மனதில் என்றும் நிற்கும். 2026 சட்டமன்ற தொகுதியிலும், இடைப்பாடி உள்பட நகராட்சி, உள்ளாட்சி அனைத்தும் வெற்றி பெறுவதற்கு உழைப்போம்,’ என்றார். கூட்டத்தில், இடைப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, பேரூராட்சி தலைவர் அழகுதுரை, பழனிச்சாமி, சம்பத்குமார், சுந்தரம், எலிசபெத்ராணி, முருகேசன், பூவா கவுண்டர், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், பொன்னுசாமி, நாகராஜன், முத்தமிழ் செல்வன், கருப்பண்ணன், குப்புசாமி, மாது, ஆண்டவர், இந்திராணி காளியப்பன், தியாகராஜன், ஜெயவேலு, கரிகாலன், செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
previous post