மதுரை, ஆக. 24: மதுரை மாநகர் மாவட்டக் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பசுமலையில் ஆக.28ம் தேதி நடைபெறும் என, மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை; மதுரை மாநகர் மாவட்டக் கழகப் பொது உறுப்பினர்கள் கூட்டம், ஆக. 28ம் தேதி காலை 11 மணி அளவில் பசுமலையில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மா.ஒச்சுபாலு தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா, ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.