பெரும்புதூர், ஆக.12: பெரும்புதூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி நிர்வாகியான இவர், எச்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, டிரான்ஸ்போர்ட் மற்றும் தொழிற்சாலை கட்டுமான பணிக்கு தேவையான மண், ஜல்லி சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை தனக்கு சொந்தமான இடத்தினை நின்றுகொண்டு பார்வையிட்டார். அப்போது, 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஆல்பட் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் தலை, கழுத்து, முகத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு 3 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதனிடையே, கொலையில் சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.