திருப்பூர், அக்.7: திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான க.செல்வராஜ் அறிவுறுத்தலின்படி திருப்பூர் தெற்கு தொகுதி பார்வையாளர் பொள்ளாச்சி தென்றல் செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன், பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு மாநகரம் கருவம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 42வது வார்டு செல்லம் நகர் கண்டியம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக வட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.