வாழப்பாடி, ஜூன் 26: வாழப்பாடியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்ஆர். சிவலிங்கம் கலந்துகொண்டார்.
வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்க உட்பட்ட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்ஆர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பது குறித்து பல்வேறு கருத்துகளை மாவட்ட செயலாளர் விளக்கினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அழகுவேல், மணி (எ) பழனிசாமி, பாலமுருகன், சித்தார்த்தன், தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா, தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அகிலன், கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.