சிவகங்கை, நவ.10: இளையான்குடியில் வடக்கு ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் பாகமுகவர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், பேரூர் செயலாளர், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன் வரவேற்றார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் போஸ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வெங்கட்ராமன் கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுப.அன்பரசன், மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி, மகளிர் தொண்டரணி இஸ்ரின்பேகம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள் பெரியசாமி, இபுராஹிம், சாரதி, ராஜபாண்டி, உதயசூரியன், தௌலத், ஜெயினுலாபுதீன், பைரோஸ் கான், கருணாகரன், காதர்பாட்சா, சத்தியேந்திரன் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து நன்றி கூறினார்.
திமுக பாகமுகவர்கள் கூட்டம்
0
previous post