சுரண்டை, மே 31: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக நிர்வாகிக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் நிதியுதவி வழங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மல்லிகாவின் கணவர் பன்னீர்செல்வம் உடல்நலம் சரியில்லாமல் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ரூ.5000 நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
இதேபோல் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் செல்லத்துரையின் மகனுக்கு நிதியுதவி வழங்கினார். இந்நிலையில் மகன் உடல் நலம் பெற்றதை தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது, ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், அந்தோணி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஜேம்ஸ், கிளை செயலாளர் முருகன், டான் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்