ஆறுமுகநேரி, மே 28: ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தெற்கு ஆத்தூரில் உள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இதில் வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, மாவட்ட பிரதிநிதி கலையரசு, புன்னக்காயல் பஞ். முன்னாள் தலைவர் சோபியா, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அன்னமரியான், மேலாத்தூர் பஞ். முன்னாள் துணை தலைவர்கள் அக்பர், பக்கீர்முகைதீன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயக்கொடி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் லிங்கராஜ், யூனியன் முன்னாள் கவுன்சிலர்கள் மாரிமுத்து, ரகுநாதன், ஒன்றிய மாணவரணி ராஜேஷ், ஊர்காவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்