தர்மபுரி: தர்மபுரி நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் அழகுவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர். தருண் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர். தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் தலைமைக் கழகம் அறிவித்தபடி உறுப்பினர் சேர்க்கை பணியை விரைந்து முடித்து அதற்கான படிவங்களை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, நகர பொருளாளர் சம்பந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் காசிநாதன், சமயா ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்