கோவை, செப். 16: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் அண்ணா 115வது பிறந்த நாள் விழா காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில், உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி, சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி நந்தகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சித்ரா வெள்ளிங்கிரி, பகுதி செயலாளர்கள் வெ.சு.சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர் பேங்க் குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் செல்வம், இளைஞர்அணி சி.வி.தங்கவேல், தண்டபாணி, நாகராஜ், எல்ஜிபி முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.