ஈரோடு, ஆக. 27: ஈரோட்டின் முதன்மையான பண்பலை ரேடியோவான சூரியன் எ.ப்.எம் 91.9 சார்பில் மாரத்தான் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “ஆரோக்கியமான நல்வாழ்வு’’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வில்லரசம்பட்டி ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் கிரவுண்டில் இருந்து எல்லப்பாளையம் வரை 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ. என மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடந்தது. 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என 1,500க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்றனர்.
அதிகாலை 5.30 மணிக்கு இப்போட்டி துவங்கியது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் டீ சர்ட் வழங்கப்பட்டது. மேலும் ஓடுபவர்களுக்கு தேவையான அனைத்த வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்பதிவு கட்டணம் எதுவும் வசூலிக்காமல் நடத்தப்பட்ட இப்போட்டியில் பெரும் திரளானவர்கள் பங்கேற்றது பாராட்டுக்குரியது என நேயர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கேளுங்… கேளுங்க… சூரியன் எப்.எம். 91.9.