இளையான்குடி: இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் மலைமேகு, மாவட்ட பிரதிநிதிகள் அய்யாச்சாமி, ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற நவம்பர் 20ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் பெரும்பான்மை இளைஞர்கள் கலந்து கொள்வது, இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் வர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சண்முகம், பார்த்தசாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.