தாராபுரம், ஆக.27: தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தில் ருத்திராவதி திமுக பேரூர் கழக செயற்குழு கூட்டம் மாவட்ட பிரதிநிதி நந்தகோபால் தலையையில் நடைபெற்றது. ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விரைவில் பேரூர் கழக வார்டுகளின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்த வேண்டும்.
செப்டம்பர் மாதம் திமுக முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கணபதிபாளையம் சுப்பராயன், திருப்பூர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராமசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவாக பேரூர் கழகச் செயலாளர் அன்பரசு நன்றி கூறினார்.