நெல்லை, மே 29: கலைஞர் பிறந்தநாள் வருகிற ஜூன் 3ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட கரந்தாநேரி ஊராட்சி முதலைகுளம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி யூனியன் துணை சேர்மன் இசக்கிபாண்டி, கரந்தானேரி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்வேல், மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் புஷ்பபாண்டி, ஒன்றிய பொருளாளர் சுரேஷ் மற்றும் கிளை செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.