வாழப்பாடி, நவ.2: வாழப்பாடி அருகே திருமனூர், தேக்கல்பட்டி ஊராட்சி ஏரிப்பகுதிகளில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நேற்று பனை விதை நடும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். சேலம் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், வாழப்பாடி ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் ரவி, பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நடராஜ், திருமனூர் சிற்றரசு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.