சேந்தமங்கலம், ஜூலை 1: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டியில் நடந்த திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் பொன்னுசாமி எம்எல்ஏ பேசினார். சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்கப் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் பேளுக்குறிச்சி ஊராட்சி, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், ‘சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 4 ஆண்டு திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக ஆதரவு தர வேண்டும்,’ என்றார். இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ராணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், ஊராட்சி ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார், ஒன்றிய துணை செயலாளர் திராவிட மணி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.
திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
0
previous post