திருத்துறைப்பூண்டி, ஜூலை 5: திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை, திருத்துறைப்பூண்டி நகரம் 5வது வார்டில் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர செயலாளருமான ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சௌமியன் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்கள். இதில் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணைஅமைப்பாளர்சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எடிசன், நகர அமைப்பார் வசந்த் மற்றும் நகர வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.