சிவகங்கை, ஜூன் 30: சிவகங்கை அருகே மதகுபட்டியில் திமுக வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், சிவகங்கை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மந்தகாளை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக பேச்சாளர் கணேசன், இளம் பேச்சாளர் சாருமதி சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குமணன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அர்ச்சுனன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் சிங்கமுத்து, மாவட்ட செய்தி தொடர்பு அமைப்பாளர் அயூப்கான் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.