இடைப்பாடி, மார்ச்.1: தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சேலம் மேற்கு மாவட்டம் இடைப்பாடி ஒன்றிய திமுக இளைஞரணி, வர்த்தக அணி சார்பில் மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி இடைப்பாடி ஒன்றியம் இருப்பாளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூவா கவுண்டர் தலைமை வகித்தார். திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ் செல்வன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வன் ஆகியோர் வரவேற்றனர். கிரிக்கெட் போட்டியினை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம் செல்வகணபதி எம்பி தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், இடைப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா, ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, பேரூராட்சி தலைவர் அழகுதுரை, பேரூர் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் இந்திராணி காளியப்பன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வன், வழக்கறிஞர் செல்லப்பன், அந்தோணி, ராபின்ஸ்டன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் விளையாடினர். வெற்றி பெற அணிகளுக்கு முதல் பரிசு 20,072 இரண்டாம் பரிசு 15,072 வழங்கப்படுகிறது.