நாமக்கல், செப்.4: சேலத்தில் டிசம்பரில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாடு நிதியாக ₹10 லட்சத்தை மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பியிடம், கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியினர் வழங்கினர்.
நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. பேசும்போது, சேலத்தில் டிசம்பரில் நடைபெறும் மாநில திமுக இளைஞரணியின் மாநில மாநாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் இளைஞணியினர் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார். இந்த கூட்டத்தில், சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் மாநில திமுக இளைஞரணியின் மாநாட்டிற்கு ₹10 லட்சம் நிதியை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர்கள் கலைவாணன், ரமேஷ்குமார், கார்த்திக், பிரபாகரன் ஆகியோர் ராஜேஸ்குமார் எம்பியிடம் வழங்கினர்.