சிவகங்கை, ஜூன் 26: தேவகோட்டை அருகே முப்பையூரில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், துணை அமைப்பாளர் முகமதுமகாதீர், திமுக ஒன்றிய செயலாளர் நாகனி ரவி முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தலைமைக்கழக பேச்சாளர் அய்யாச்சாமி, இளம் பேச்சாளர் சுமித்ரா சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தாஸ், தினேஷ், பாண்டி, ரகு, ராமநாதன், விஜய் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் குருபிரசாத் நன்றி கூறினார்.