மொடக்குறிச்சி,ஜூன்15: திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் முள்ளாம்பரப்பில் நடைபெற்றது. திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட முள்ளாம்பரப்பில் நடைபெற்றது.மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். அதேபோல் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நஞ்சை ஊத்துக்குளியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் பவானி கண்ணன் கலந்து கொண்டு தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், ஒன்றிய நிர்வாகிகள் ராஜா (எ)ஆசைத்தம்பி,ஆறுமுகம்,பேட்டை பெரியசாமி இளைஞரணி நிர்வாகிகள் சுதன்,கவின், யுவராஜா,ரமேஷ்,கிரி தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மனோஜ்,கலையரசன் மாணவரணி நிர்வாகிகள் சதீஷ்,சபரி, கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.