திருவண்ணாமலை, பிப்.15: திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. 2026 தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். திருவண்ணாமலை மாட வீதியை ₹15 கோடி மதிப்பில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் இரண்டாம் கட்ட பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கூடுகிற கூட்டம் மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால், ஒன்றிய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பது வழக்கம். நடிகர் விஜய்க்கு அதுபோன்ற காரணங்கள் இருப்பதாக ஒன்றிய அரசு கருதியிருக்கலாம். எனவே, பாதுகாப்பு அளித்திருக்கிறது. விஜயக்கு தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் இருப்பதாக தெரிவித்திருக்கும் பிரசாந்த் கிேஷார் ஒன்றும் தமிழ்நாட்டை உருவாக்கியவர் அல்ல. வியாபார நோக்கத்தில் சொல்லியிருப்பார். பத்திரிக்கையின் சர்வே சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதில், கடந்த மக்களவை தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்ற போது 47 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. அதன்பிறகு, கடந்த ஒரு ஆண்டில் திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் வேண்டியவரான முதல்வரின் திட்டங்களால் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. எனவே, திமுகவுக்கு 52 சதவீத வாக்குகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் செல்வாக்கு 5 சதவீதம் கூடியிருக்கிறது. எனவே, வரும் 2026 தேர்தலில் திமுக மகத்தான வெற்றிபெரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது 2026 தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
0