Friday, April 12, 2024
Home » திமுகவினர் சைக்கிளில் வீதி வீதியாக சென்று பட்ஜெட் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டறிக்கை கொடுத்து பிரசாரம்

திமுகவினர் சைக்கிளில் வீதி வீதியாக சென்று பட்ஜெட் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டறிக்கை கொடுத்து பிரசாரம்

by MuthuKumar

மயிலாடுதுறை, பிப்.29: மயிலாடுதுறையில் திமுக சார்பில் தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சைக்கிளில் சென்று வீடு வீடாக பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதான கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து, திமுக அரசின் சாதனைகள், தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் திமுகவினர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான செல்வராஜ் தலைமையில் திமுகவினர் மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டு பகுதிக்கு சைக்கிளில் சென்று வீடு வீடாக திமுகவினர் தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட மாணவரணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருதமுத்து, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், நகரம்டா உறுப்பினர் விஜய்,மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதலில் அம்ரீத் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. மிகவும் தொன்மையான நாகூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் பல லட்சகணக்கான
மக்கள் பயனடைவார்கள்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi