க.பரமத்தி: கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, 125 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலை ஆரம்ப காலத்தில் ஒருவழிப்பாதையாக இருந்தது. இதன் வழியாக கோவை முதல் புதுச்சேரி வரையிலும், புதுச்சேரி முதல் ஊட்டி வரை செல்ல முக்கிய நெடுஞ்சாலையாக இருந்தது. நகரங்களின் வளர்ச்சியால், போக்குவரத்து முக்கியத்துவமாக கருதப்பட்டு கடந்த, 2009 ஆண்டு சுமார் ரூ.250 கோடி முதல், ரூ.300 கோடியில் கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக அகலபடுத்தப்பட்டது