திண்டுக்கல், ஜூன் 16: திண்டுக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதல்நிலை போட்டி தேர்வினை 4,836 பேர் எழுதினர் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதல்நிலை போட்டி தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சரவணன் பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப் 1ஏ தேர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,448 நபர்கள் தேர்வு எழுதுவதற்காக 15 இடங்களில் 25 அறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 4,836 நபர்கள் தேர்வு எழுதினர். 1,612 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை கண்காணிக்க மொத்தம் 7 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 26 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்வாறு தெரிவித்தார்.