திண்டுக்கல், செப். 1: தமிழகத்தில் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு தேர்வு நடைபெறுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 106 தட்டச்சு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் திண்டுக்கல் ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்பிஎம் கல்லூரி, ஏபிசி கல்லூரி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, பழநியாண்டவர் கலை கல்லூரி ஆகிய 5 மையங்களில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் பயிற்சி பெற்ற 5,223 பேர் பங்கேற்றனர். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடந்தது. இன்று தட்டச்சு முதுநிலை தேர்வுகள் நடைபெறுகிறது.