திண்டுக்கல், ஏப். 5: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ119.6 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகிக்க, கலெக்டர் விசாகன், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மருத்துவக்கல்லூரி இயக்குனர் சாந்தி மலர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை நோயாளிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 26 இடங்களில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் மருத்துவ துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவர், செவிலியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் செய்யப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் உருமாற்ற வைரஸால் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஜெயன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், பகுதி கழக செயலாளர் ராஜேந்திர குமார், ஜானகிராமன், பஜுலுல் ஹக், மாநகர பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.