திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் இரண்டு இ-சேவா கேந்திரங்கள் திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா தலைமை வகித்து இ-சேவா கேந்திராவை திறந்து வைத்தர். பின்னர் அவர் பேசுகையில், ‘வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை எளிதாக தாக்கல் செய்ய இ-சேவா கேந்திரா உதவிகரமாக இருக்கும்.
வழக்கறிஞர்கள் வழக்கு கோப்புகளை இணையவழியாக தாக்கல் செய்ய உதவியாக இருக்கும். இதன்மூலம் பொதுமக்கள் எளிய முறையில் வழக்கின் நிலை, வாய்தா விபரம் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட இதர விபரங்களை தெரிந்து கொள்ளலாம்’ என்றார். இதில் கலெக்டர் பூங்கொடி, எஸ்பி பிரதீப், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.