திண்டுக்கல், ஜூலை 3: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாசாணன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (36). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் அருகே சிறுமலையில் உள்ள தென்மலையில் தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் முருகன் விஷமருந்தி மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் அருகே தோட்ட தொழிலாளி தற்கொலை
0
previous post