திண்டுக்கல், ஆக. 17: திண்டுக்கல்லில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. பகல், இரவு மின்னொளியில் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சென்னை, கோவை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. முதல் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் அணி, திண்டுக்கல் எஸ்எஸ்எம் கல்லூரி அணியை 7:0 என்ற கோல் கணக்கில் வென்றது.
2து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி, மதுரை எஸ்என் கல்லூரி அணியை 4:0 என்ற கோல் கணக்கில் வென்றது. 3வது போட்டியில் கோயம்புத்தூர் ரத்தினம் கல்லூரி அணி, நாசரேத் மர்காஸிஸ் அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வென்றது. போட்டியின் துவக்க விழாவில் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், கால்பந்து கழக துணை தலைவர் ரமேஷ் பட்டேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.