திண்டுக்கல், நவ. 5: திண்டுக்கல்லில் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மின் மயான ஊழியர்கள், தினசரி நாளிதழ் விநியோகஸ்தர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஆரோக்கிய செல்வராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தக சங்க துணை தலைவர் சுந்தரராஜன், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம் ஆகியோர் மின் மயான ஊழியர்கள், தினசரி நாளிதழ் விநியோகிக்கும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.