திண்டுக்கல், ஜூலை 7: மொகரம் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கந்தூரி விழாவிற்கு ஏகத்துவ மெய்ஞான சபை நிர்வாகி காஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஹுஸைன் முகம்மது, முகம்மது சதக்கத்துல்லா, ஹாஜி முகம்மது ரஹ்மத்துல்லா, அப்துல் வஹாப் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பிலால்கள் நலச்சங்க மாநில கவுரவத் தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன் கலந்து கொண்டு, கந்தூரி விழாவினை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு உணவு வழங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று உணவு பொட்டலங்களை பெற்றுச்சென்றனர்.