திண்டுக்கல், செப். 23: திண்டுக்கல் திருவருட் பேரவை சார்பில் நல்லிணக்க விழா கோபால சமுத்திரக் கரையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருவருட் பேரவை இணைச் செயலாளர் திபூர்சியஸ் வரவேற்றார். துணைத் தலைவர் யூசுப் அன்சாரி, செயற்குழு உறுப்பினர்கள் பெஞ்சமின், ஆரோக்கியம், சகாயராஜ், சாம்சன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாட்டாண்மை காஜா மைதீன் அனைவரும் ஒற்றுமையுடனும் நட்புடனும் ஜாதி மதம் வேறுபாடுயின்றி அனைவரும் இருக்க வேண்டுமென பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.