திண்டுக்கல், ஜுன் 10: திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து, கோரிக்கைகள் தொடர்பான 293 மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வைத்திறன் குறைபாடு உடைய 10 மாணவர்களுக்கு டெய்லி பிளேயர் தலா ரூ.14,000 வீதம் ரூ.1,40,000 மதிப்பீட்டிலும், 2 பேருக்கு கைக்கடிகாரம் ரூ.3,512 மதிப்பீட்டிலும், 2 பேருக்கு மடக்கு குச்சிகள் ரூ.606 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1,44,400 மதிப்பீட்டிலான நலதிட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஒ ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சிவக்குமார், கோட்டைக்குமார், சுந்தரமகாலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.