திண்டுக்கல், செப். 1: திண்டுக்கல்லில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கதிரேசன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவதற்கான நோக்கம், கருத்துகள் பற்றி விளக்கவுரையாற்றினார். இதில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சுரேஷ்குமார், காளிதாஸ், ரகுமான், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கண்ணன்,
மாநகர விவசாய அணி அமைப்பாளர் கவியரசன், பேரூர் செயலாளர்கள் ராமலிங்கசாமி, ஜெயபால், மாவட்ட மகளிர் அணி விஜயா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பொன்முருகன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு வீராச்சாமி மற்றும் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பொன்ராமன் நன்றி கூறினார்.