திண்டுக்கல், ஆக.21: இந்திய செஞ்சிலுவை சங்க பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் நாட்டாமை காஜா மைதீன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் செய்து அபுதாகிர் ஆண்டறிக்கை வாசித்தார்.
மாவட்ட பொருளாளர் சுசீலா மேரி வரவு செலவு கணக்குகளை வாசித்தார். இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதில் துணைத் தலைவர், அவைத்தலைவர், துணை அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை தலைவர் சரவணன் நன்றி கூறினார்.