திண்டுக்கல், ஜூன் 11: திண்டுக்கல் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு தூய்மை பணி முகாம் மலைக்கோட்டை பின்புறம் உள்ள அய்யன்குளக்கரையில் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சுகாதார உறுதிமொழி எடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். இதனை தொடர்ந்து அய்யன்குளம் இருக்கைகள் சுத்தம் செய்து குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு விளம்பர பலகைகள் அகற்றுதல், பணி கட்டிட இடிப்பாடு கழிவுகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்தல், வீடுகள் , கடைகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டியதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மண்டல தலைவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார் தக்ஷிணாமூர்த்தி முருகையா தங்கவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.