திண்டுக்கல், ஜூலை 13: திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் அழகுபட்டியை சேர்ந்த ராமசாமி கடந்த ஜூலை 10ம் தேதி திண்டுக்கல்லில் பழநி பைபாஸ் அருகே நடந்த விபத்தில் காயமடைந்து மதுரையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போது உறுப்புகள் செயலிழந்து மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார். இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் அடக்கம் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதி சடங்கிற்கு திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி நேரில் சென்று மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த ராமசாமி உடலுக்கு தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஆர்டிஓ சக்திவேல், மேற்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ் ஆகியோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு கலெக்டர் மரியாதை
51
previous post