திண்டுக்கல், ஆக 1: இந்திய விமான படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஆக.4ம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இந்திய விமான படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்வு தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் திண்டுக்கல் புனித அந்தோனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் சென்னை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் மாதவதாஸ், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி முன்னிலையில் இந்திய விமானப்படை அலுவலர் கனிக்குமார் விமான படையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் அக்னிவீர் வாயு தேர்வு விழிப்புணர்வு
45
previous post