பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனை வோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய