நெல்லை, ெசப். 5: திசையன்விளை அருகே விவசாயியின் டிராக்டரிலிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த விவசாயி ராஜன். இவர் தனது டிராக்டர் மூலம் விவசாய பொருட்களை ெகாண்டு செல்வதற்கு பயன்படுத்தி வருகிறார். இவர் விவசாயிகள் சங்க பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த மாதம் 13ம் தேதியன்று திசையன்விளை அடுத்துள்ள எருமைகுளம் அருகே டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அவர் கடந்த 18ம் தேதியன்று டிராக்டரை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். டிராக்டரிலிருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்ற விவரம் தெரிய வந்தது. இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் ராஜன் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சிசிடிவியிலுள்ள பதிவுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.