திசையன்விளை,அக்.19: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா கொண்டாட்டத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு திசையன்விளை, உவரி, குலசை ஆகிய இடங்களில் மத நல்லிணக்கமாக அன்னதானம், குடிநீர் பாட்டில்கள், இலவச மருத்துவ சேவை, குளிர்பானங்கள் மற்றும் பிஸ்கட் ஆகியவை நெல்லை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சொந்த ஏற்பாட்டில் வழங்கினார். திசையன்விளையில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பேராசிரியர் ஜாண்கென்னடி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் முருகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுவிகர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் கேசவன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அணி துணை அமைப்பாளர் நசுருதீன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் தங்கபிரபு, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் தனபால், ஒன்றிய பிரதிநிதி சீனிவாசன், நேவிசன் லியோன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்றோ சந்தியாகு அக்ஸில், ஆசிக்முகமது, கிழக்கு ஒன்றிய தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஐயப்பன், வார்டு செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சீனிவாசன், டெய்லர் முருகன், பெரியசாமி, கவுன்சிலர் நடேஷ் அரவிந்த், ஒன்றிய பிரதிநிதி சதீஷ், கண்ணன், பாஸ்கர், ஜெயபால், சாகுல்ஹமீது, லியாகத் அலி, ஹாசன்அலி, பாதுஷா, அருள், குறிஞ்சிகுளம் கார்த்திக், மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளையில் தசரா பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள்
0
previous post