திங்கள்சந்தை, ஜூன் 17: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் தலைமையிலான போலீசார் இரணியல், திங்கள்நகர், தலகுளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பறயம்விளை பகுதியில் சென்றபோது அங்கு ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது , முன்னுக்குப் பின் முரணாக பேசவே அந்த வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 12 கிலோ போதை புகையிலை பாக்கெட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எழிலரசி (63) என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திங்கள்சந்தை அருகே வீட்டில் பதுக்கிய புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் பெண் கைது
0
previous post