தா.பழூர், ஜூலை 5: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் வரும் 7ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வரா பூஜை, புண்ணியாஹ வாசனம், யாகசாலை நிர்மானம், பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், தீர்த்தஸங்கரஹணம் நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் அக்னி ஸங்க்ரஹணம் நடைபெற்றது.
மாலை 5 மணி அளவில் விக்னேஸ்வரா பூஜை, புண்யாஹ வாசனம், சோமகும்ப பூஜை, ஆச்சரிய ரக்ஷாபந்தனம் கும்பலங்காரம், கலாகர்சனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜைகள், திரவ்யாகிதி, பூர்ணாஹிதி உபசாரங்கள், நான்கு வேத பாராயணம், சிவகாம பாராயணம் , திருமுறை பாராயணம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. கலசாபிஷேகத்தை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தை தலைமையில் சுமந்து மேளதாளத்துடன் கோவிலின் உட் பிரகாரத்தில் வலம் வந்தனர்.