தா.பழூர், ஜூலை 2: பொதுவாக தாய்மைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை பல விதங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நன்றி குணத்தில் 5 அறிவு ஜீவனில் நாயை மிஞ்ச எதுவும் இல்லை. ஆனால் ஒரு இனத்தில் வேறு விலங்குகள் அருகில் வந்தால் கடிப்பது நிச்சயம்.அதில் நாய்க்கும், பூனைக்கும் ஏக பொருத்தம்.
இப்படி இருக்கையில் கோடங்குடி கிராமத்தை சேர்ந்த நதியா என்பவர் வீட்டில் செல்ல பிராணிகளான நாய் மற்றும் பூனை வளர்த்து வருகிறார். பெண் நாய் ஒன்றை கடந்த 4 வருடம் வளர்த்து வருகிறார். அந்த நாய் 2 மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளை அருகில் உள்ளவர்கள் உறவினர்கள் எடுத்து சென்றதால் நாயிடம் குட்டிகள் இல்லாமல் இருந்து வந்தது.இந்நிலையில் பக்கத்து வீட்டில் பிறந்து 1 மாதம் ஆன பூனைக்குட்டி தாயிடம் பால் குடித்த நிலையில், அதனிடம் இருந்து பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. பொதுவாக பூனை திருட்டுதனமாக பால் குடிக்கும் என்பார்கள் இங்கே எதிர்மாறாக நாயின் அனுமதியுடன் பூனை பால் குடிக்கிறது. இவற்றின் பாசத்தை பலரும் பார்த்து செல்கின்றனர்.