தா.பழூர், ஜூன், 5: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் ஆகியோரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து அலுவலகம் முன்பு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு, சட்டமன்ற உறுப்பினரும், தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், இனிப்புகள் வழங்கி, பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அவைத்தலைவர் சூசைராஜ், பொருளாளர் நாகராஜன், ஒன்றிய கழக துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சங்கர், கார்த்திகைகுமரன், குணசீலன், முனைவர் முருகானந்தம், எழிலரசி அர்ச்சுனன், நீல.மகாலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.